Top AD

Breaking News

புகையிரத பெட்டிகள் ஆசனங்களை சேதப்படுத்தினால் என்ன தண்டனை தெரியுமா ?

புகையிரத பெட்டிகள் மற்றும் ஆசனங்களுக்குச் சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சிவில் உடையில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரத சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் பயணிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக பொது சொத்தினை சேதப்படுத்தியமை, தொடர்பிலான சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


புகையிரத சேவையினை நடத்துவதற்காக பில்லியன் கணக்கில் அரசாங்கம் செலவிடுவதாக தெரிவித்துள்ள அமைச்சர், சேவையின் பயனை அனுபவிக்கும் பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.