பியார் பிரேமா காதல் - விமர்சனம்
விமர்சனம்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர்
இயக்கம் - இளன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - கே புரொடக்ஷன்ஸ், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் அவர்களது பார்வையில் பலவிதமான காதல் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். காதல் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தான், ஆனால், அது பிரிவில் முடியும், அல்லது கல்யாணத்தில் முடியும். கல்யாணத்தில் முடிந்தால் மட்டும் தான் காதல் இல்லை, பிரிவில் முடிந்தாலும் காதல் காதல் தான் எனவும் பார்த்திருக்கிறோம்.
இந்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் இயக்குனர் இளம் சொல்லியிருக்கும் காதல் கொஞ்சம் பயப்பட வைத்திருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் கூட தோல்வியில் முடிகிறது, காதலித்தவர்கள், கல்யாணம் செய்து கொண்டால் தான் அவர்களுக்குள் காதல் இருக்கிறது என்பதெல்லாம் பொய் என இந்த 2018ன் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் சொல்லும் அளவிற்கு நமது கலாச்சாரமும், பெண்களும் இன்னும் மாறவில்லை. 2028ல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்பா டிவி மெக்கானிக், அம்மா குடும்பத் தலைவி, ஒரே மகன் ஹரிஷ் கல்யாண், அலுவலகத்தில் வேலையே பார்க்காத ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர். பக்கத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரைசா வில்சனை, ஜன்னல் வழியே பார்த்து காதல் கொள்கிறார். ஒரு நாள் ரைசா, ஹரிஷ் அலுவலகத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகிறார். வசதியான மாடர்ன் பெண்ணாக ரைசாவிடம் தயங்கித் தயங்கி பழக ஆரம்பித்து, காதலித்து, கடைசியில் அவருடன் 'லிவிங் டு கெதர்' வாழ்க்கையும் வாழ ஆரம்பிக்கிறார் ஹரிஷ். ஒரு சந்தர்ப்பத்தில் ரைசாவிடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஹரிஷ் வற்புறுத்த இருவரும் பிரிகிறார்கள். பின்னர் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த 'பியார் பிரேமா காதல்'.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த போதே ஹரிஷும், ரைசாவும் பழகிய நட்பு, இந்தப் படத்திற்கு நன்றாகவே பயன்பட்டிருக்கும் போலிருக்கிறது. இருவரையும் திரையில் பார்க்கும் போது நிஜக் காதலர்களைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. காதல் படங்களைப் பார்க்கும் போது அந்தக் காதல் ஜோடிகள் நம் மனதிற்கு 'டக்'கென அமர்ந்து கொள்ள வேண்டும். அந்த விதத்தில் ஹரிஷும், ரைசாவும் 'எவிக்ஷன்' வரும் அளவிற்கு 'நாமினேட்' ஆகாமல் நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள்.
அப்பா, அம்மா மீது அதிகப் பாசம் கொண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன், காதலுக்காகவும், காதலிக்காவும் இப்படியெல்லாம் மாறிவிடுவானா என்பது கொஞ்சம் அதீதமான கற்பனைதான். அதுவும் இரண்டு தெரு தள்ளி லிவிங் டு கெதர் வாழ்க்கை வேறு.
ஹரிஷும், ரைசாவும் காதலிக்க ஆரம்பித்த பிறகு அடிக்கடி கொஞ்சிக் கொள்கிறார்கள், முத்தமிட்டுக் கொள்கிறார்கள், அடுத்த காட்சியிலேயே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின்னர் ஒன்று சேர்கிறார்கள். படம் முழுவதும் இது தொடர் திரைக்கதையாக இருக்கிறது. மேலும், படத்தில் ஹரிஷ், ரைசா தவிர வேறு யாரும் திரையை ஆக்கிரமிக்கவில்லை. காதல் படம் தான் என்பதற்காக இருவரையுமேவா அதிக நேரம் காட்டுவது, அதுவும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இருந்தாலும், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஹரிஷுக்கு இனிமேலாவது நல்ல படங்களும் கதாபாத்திரங்களும் கிடைக்கட்டும். தமிழ் சினிமாவிற்கு கிளாமராக மட்டும் தன்னை காட்டிக் கொள்ளாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் ஒரு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார் ரைசா. நடிப்பிலும் தாரளாம், ஆடையிலும் தாராளம், தமிழ் சினிமாவில் தாக்குப்பிடித்துவிடுவார்.
மூன்று வீடு, ஒரு அலுவலகம், ஒரு கடை என காட்சிகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சில கதாபாத்திரங்களுடனேயே சுற்றி வருவது குறையாகத் தெரிகிறது. கிளைமாக்சில் கல்யாணம், அந்த டிவிஸ்ட் எல்லாம் கொஞ்சம் சினிமாத்தனம். மற்றபடி இந்தக் கால இளைஞர்களைப் படம் கவரலாம்.

படத்தில் ஹரிஷ் பார்த்தால் பாட்டு, ரைசா சிரித்தால் பாட்டு என வந்து கொண்டேயிருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் இசைக்கருவிகளின் இசையின் இனிமை அதிகம். “ஏ பெண்ணே..., காற்றே உன் காலடியை..., கண்ணே என்...” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனாலும், இப்படிப்பட்ட காதல் படங்களுக்கு யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என மனம் யோசிக்கிறது.
படத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காக முனிஷ்காந்த். பாவம், அவரால்தான் சிரிக்க வைக்க முடியவில்லை. இருந்தாலும் ஹரிஷ் நண்பராக நடித்திருக்கும் தீப்ஸ் அந்தக் குறையைக் கொஞ்சமாகத் தீர்த்து வைக்கிறார். ஹரிஷ் அப்பா பாண்டியன், அம்மா ரேகா ஆகியோரை விட ரைசா அப்பா ஆனந்த்பாபுவுக்கு காட்சிகள் அதிகம்.