Top AD

Breaking News

Sundar Pichai வெற்றி பயணம் | GOOGLE CEO Biography |








சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூலை 121972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகத்து 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில்மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பணி

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார்.