Top AD

Breaking News

நீண்ட நாட்களுக்கு பின் இலங்கை அணி அபார வெற்றி....


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 219 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே தொடரை இழந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்ததோடு, இருவரும் இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களைப் பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பில் டோம் குர்ரன் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷீத் மற்றும் லியம் பிளாங்கட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு. ஆரம்ப ஓவரிலேயே அதிர்ச்சியளித்தது இலங்கை அணி.
சிறப்பாக பந்து வீசிய கசுன் ராஜித முதலாவது ஓவரின் 5 ஆவது பந்தில் போல்ட் முறையில் ஜேசன் ரோயை ஆட்டமிழக்கச் செய்ய அடுத்த ஓவரில் சமீர. அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் பென் ஸ்டோக் ஆகியோரை எவ்வித ஓட்டமும் பெறாமல் ஆட்டமிழக்கச் செய்தார். அதற்கமைய, இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அதன் பின் களம் கண்ட பென் ஸ்டோக்ஸ் களத்திலிருந்த ஜோ ரூட் உடன் நிதானமாக ஆட எத்தனித்த வேளை ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.
அதன் பின் களம் இறங்கிய மொயீன் அலி மற்றும் பென் ஸ்டாக் ஜோடி இங்கிலாந்து அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டது. மொயீன் அலி 37 ஓட்டங்களுடனும் பென் ஸ்டாக் 67 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை 9 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.
இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளையும், துஸ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்படி டக்வர்த் லூயிஸ் விதிப்படி இலங்கை அணி 219 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மூன்று போட்டிகளையும் வென்றிருந்த இங்கிலாந்து அணி, இப்போட்டிகள் மாத்திரம் தோல்வியுற்றதற்கு அமைய, 3-1 எனும் அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக நிரோஷன் திக்வெல்லவும் தொடரின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோகனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை 366/6 (50.0)
நிரோஷன் திக்வெல்ல 95 (97)
தினேஷ் சந்திமால் 80 (73)
குசல் மெண்டிஸ் 56 (33)
மொயின் அலி 2/57 (8.0)
டொம் குர்ரன் 2/71 (8.0)
லயம் பிளங்கட் 1/44 (5.0)
ஆதில் ரசீத் 1/52 (10.0)
இங்கிலாந்து - 132/9 (26.1)
பென் ஸ்டாக் 67 (60)
மொயின் அலி 37 (37)
அகில தனஞ்சய 4/19 (6.1)
துஸ்மந்த சமீரா 3/20 (6.0
கசுன் ராஜித 1/21 (6.0)
தனஞ்சய டி சில்வா 1/18 (4.0)