இன்று உங்களுடைய ராசி பலன்கள் 25.10.2018
மேஷம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பீர்கள். பழைய சம்பவங்களை அசை போட்டு பார்ப்பீர்கள். பயணங்களால் புதியவர்களின் நட்பு கிட்டும்.
ரிஷபம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும் என்றாலும் உடனுக்குடன் விரயம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். வாகனம் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முட்டுக்கட்டைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
காலையில் மனக்குழப்பம் மாலையில் பணப்புழக்கம் ஏற்படும் நாள். வழக்குகளில் இருந்த தாமதம் அகலும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக மருத்துவச்செலவு ஏற்படும்.
கன்னி
முன்கோபத்தைத் தவிர்த்து முன்னேற்றம் காண வேண்டிய நாள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்துதவுவர். சான்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவதன் மூலம் தடைகளை அகற்றிக்கொள்ளலாம்.
துலாம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு ஏற்படும்.
விருச்சிகம்
மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். பெரிய மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
தனுசு
தள்ளிப்போன செயல்கள் தானாக நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
கும்பம்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். புது முயற்சி வெற்றியைத் தேடித்தரும்.
மீனம்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். வரன்கள் வாயில்தேடி வந்து சேரும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கை கூடும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். கவுரவம், அந்தஸ்து உயரும்.