மாணிக்கக்கற்கள் நிறைந்த புதிய வகை கிரகம் கண்டுபிடிப்பு
வானியலாளர்கள் புதிய வகை கிரகம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இக் கிரகமானது வழமைக்கு மாறான தோற்றத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சாதாரண மாணிக்கக்கற்கள் மற்றும் நீல நிற மாணிக்கக்கற்கள் என்பன நிறைந்திருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
இது சுப்பர் ஏர்த்தைப் போன்ற ஒரு கிரகம் என குறிப்பிடுகின்றனர்.
அதாவது இங்கு மலைகள், உலோகங்கள் போன்ற அடர்த்தியான பதார்த்தங்கள் காணப்படலாம் எனவும் இது பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் இணைந்த தோற்றத்தினை தருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக் கிரகத்தினை சூரிச் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்களே இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.