இலங்கையின் இந்து ஆலயம் ஒன்றில் அதிசயம்!! படையெடுக்கும் மக்கள்...
புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்குட்பட்ட வகுகவ்பிட்டிய பிரதேசத்தில் ஊற்று மாரியம்மன் என்ற சிறிய கோயிலில் விசித்திரமான ஊற்று நீர் காணப்படுவதாக மக்கள் அதிசயிக்கின்றனர்.
குறித்த ஊற்று நீர் குளிர்மையாக, செரிவு கூடியதாக, விரும்பி பருகுவதற்கு சுவையானதாகவும், மருத்துவ குணமிக்கதாகவும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வெயில் காலங்களிலும் இந்த நீர் ஊற்று வற்றுவதில்லை என்றும் சிறிய ஊற்றாக வெளிவந்து ஆறாக ஓடும், இந்த நீரை மக்கள் குடிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்த இடத்தில் “காக்கா பொன்னு” என்று சொல்லக் கூடிய கனிய வளமும் காணப்படுவதால் நீருடன் தங்க துகள்கள் போன்று காக்கா பொன்னும் நீர் பொங்கி எழுகின்றது.
இராமாயனத்தில் இராவணன் சீதையை இந்தியாலிலிருந்து இராமேஸ்வரம், மன்னார், மாத்தளை, புஸ்ஸல்லாவ வழியாக தனது புஸ்பக விமானத்தில் நுவரெலியாவிற்கு அழைத்து செல்லும் வழியில், சீதை இராமனை நினைத்து விட்ட கண்ணீரின் ஒரு துளி இப்பிரதேசத்தில் விழுந்ததாகவும். இந்த கண்ணீர் விழுந்த இடம் தற்போதும் சீதை அம்மனின் கண்ணீராக பொங்கி நீராக வருகின்றது என்றும் வரலாறு கூறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள சோகம தோட்டத்தில் காணப்பட்ட அம்மன் சிலை ஒன்று கல்லர்களினால் களவாடப்பட்டு வேறு இடத்திற்கு இவ்வழியாக கொண்டு செல்லும் போது. இந்த இடத்தில் அந்த சிலை இயற்கையாகவே பூமிக்கு அடியில் சென்று விட்டதென்றும் அன்று முதல் இந்த நீரூற்று உருவாகி சிலையின் நிறத்தில் தங்க துகள்களுடன் பொங்கி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
குறித்த இடத்தில் அனுமானின் உருவம் ஒன்று இயற்கையாகவே மரம் ஒன்றில் உறுவாகி உள்ளது. இதையும் மக்கள் வணங்கி வருகின்றனர்.
குறித்த கோயிலில், தற்போது உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் “ஊற்றுலிங்கேஸ்வரர்” சிவலிங்கம் ஒன்றும் பிரதிஸ்டை செய்யபட்டுள்ளது. பக்தர்கள் ஊற்று நீரை எடுத்து சிவனுக்கு தாங்கலாகவே ஊற்றி வழிபட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது