Top AD

Breaking News

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஐரோப்பா செல்ல வாய்ப்பு

ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இளைஞர் யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

நிர்மாணத்துறை, சுற்றுலா, ஹோட்டல் உபசரணை, இயந்திர தொழில்நுட்பம்,தொலைத் தொடர்பாடல், கால்நடை வளர்ப்பு,போன்ற துறைகளுக்காக பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.




கணிதம் கணனி போன்ற அறிவுகளும் மேம்படுத்தப்பட இருக்கின்றன. பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

NVQ தரச்சான்றிதழ் கொண்ட தொழில் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு பயிற்றிசியின் இறுதியில் வழங்கப்பட இருக்கின்றன.

ஐரோப்பா , அவுஸ்திரேலியா , போன்ற நாடுகளில் இலகுவான முறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது