ஐரோப்பாவாக மாறும் யாழ். குடாநாடு! ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை
வட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக செயற்படுமாறு காலநிலை அவதான மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் அதிகுறைந்த வெப்ப நிலையின் அளவு 18.5பாகை செல்சியசாகக் காணப்பட்ட அதேவேளை அதிகூடிய வெப்பநிலை 29 பாகையாகக் காணப்பட்டது.
இந்நிலையில், அடுத்து வரும் தினங்களுக்கும் இதே நிலைமை தொடரும். பனிப்பொழிவின் ஒரு வடிவமான (mist) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை 7.30 மணிவரை தொடரும்.
இதனால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாடும் போது கடும் குளிரைத் தாங்கக் கூடியவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது. கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வடக்கில் ஏற்பட்டுள்ள குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசொகரியங்களும் ஏற்படும். எனவே குளிரைத் தாங்கக் கூடியவாறான உடைகளை அணிந்திருப்பது சிறந்தது என்றும் காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
வடக்கில் முன் எப்பொழுதும் இல்லாதவாறு தற்போது இயற்கையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதிக வெள்ளப் பெருக்கும் மற்றும் பனிப்பொழிவினால் தொற்று நோய்களும் வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.