Top AD

Breaking News

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்



நாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 2 பேர் கடற்படையினர் எனவும் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் மீதி 2 பேர் இராணுவ வீரர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 10 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரில் 4 பேர் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்றும் இருவர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர் என்றும் மற்றையவர் பெலரஸிலிருந்து வந்தவரென்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக 1,643 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 811 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 821  பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.