Top AD

Breaking News

பொதுமன்னிப்புக்கு தகுதிபெற்றுள்ளவர்களின் பெயர்பெட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

 பொதுமன்னிப்பு பெறுவதற்கு  தகுதிபெற்றுள்ளவர்களின் பெயர்பெட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறு குற்றங்களுடன் தொடர்புடைய  902 கைதிகளின்  பெயர்விபரங்கள் ஜனாதிபதியின் அனுமதி பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை  தொடர்பில் ஆராய்வதற்காக  ஜனாதிபதியினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கொரோனா  வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை  குறைத்தல் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு  இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க  இந்திரதிஸ்ஸ  தலைமையில் இந்த  விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.