சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளை அழிக்கும் நடவடிக்கை நேற்று முன்னெடுப்பு
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுகளை அழிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 3 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 6 இலட்சத்து 50 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிகரெட்டுகள் கடந்த வருடம் ஓகஸ்ட் 17ஆம் திகதி கப்பல் மூலமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனமொன்றின் பெயரில் இந்த சிகரெட்டுகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டவிரோத சிகரெட்டுகளை அழிக்கும் நடவடிக்கையில், சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.