லடாக்கில் உள்ள மலை ஒன்றை இந்தியா கைப்பற்றியது உண்மையா ? மக்கள் தப்பியோட்டம் …
கடந்த சில மாதங்களாகவே இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு படையினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகளும் சுமூக முடிவை எட்டாத நிலையில் எல்லையில் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா – சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது என்ற செய்தியை இந்தியா வெளியிட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தமது கிராமங்களை கை விட்டு தப்பி வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
அங்கே பெரும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.