Top AD

Breaking News

ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை நெருங்கும் இந்தியா என்ன நடக்கப் போகிறது ?

 


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் உலக கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை நோக்கி நெருங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,316,605 பேராக உயர்ந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 20,331,838 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனா வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் 913,284 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,588,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 196,328 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,559,725என்பதும், பலியானோர் எண்ணிக்கை 76,304என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,539,983என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,760பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,239,763 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 129,575 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,497,337 என்பதும் குறிப்பிடத்தக்கது